கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்..!

Published : Oct 15, 2023, 03:22 PM IST
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்..!

சுருக்கம்

ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பிரவீன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரவீன் என்பவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பிரவீன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரவீன் என்பவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் மனைவி லலிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்த  கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ் என்பவரின் உதவியை நாடியுள்ளார். 

கடந்த 10-ம் தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கணவர் மது போதையில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில்  இயற்கை மரணம் இருக்க வேண்டும் என்பதால் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்துள்ளனர். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கணவர் இறந்தார். 

இதனையடுத்து கணவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக லலிதா கூறியுள்ளார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கணவரை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்ததை லலிதா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!