இறந்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.28 லட்சம் அபேஸ்! வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீஸ்!

By SG Balan  |  First Published Apr 12, 2023, 7:42 AM IST

இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு வெவ்வேறு கணக்குகளுக்கு 28 லட்சம் ரூபாய் தொகை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இறந்தவரின் தந்தை அளித்த புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர்.


இறந்த தனியார் நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரின் கணக்கில் இருந்து, 28 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, மூன்று பேர் மீது, கசர்வடவலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் பியூஷ் சர்மா, மகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் ஜி.பி. சாலையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். செப்டம்பர் 21, 2021 அன்று, டெல்லியில் இருந்த ​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பியூஷ் இறந்ததை அடுத்து அவரது தந்தை பிப்ரவரி 16, 2022 அன்று வங்கியை அணுகினார். இறந்துவிட்ட தனது மகனின் வங்கிக் கணக்கில் தான் ஒரு நாமினியாக இருப்பதாகக் கூறி, வங்கி அறிக்கையைக் கேட்டிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

மனைவியின் ஆபாச படங்களை வைத்து மிரட்டிய கணவர்; 5 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி

வங்கியில் இருந்து பெற்ற அறிக்கையைப் பார்த்தபோது, செப்டம்பர் 30, 2021 முதல் ஏப்ரல் 22, 2022 வரை குமார் தீபக், குமார் டி, குமார் தீப் மற்றும் குமாரி ராஸ் ஆகியோருக்கு ரூ.28.3 லட்சம் பணம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். இது பற்றி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

இதனால் பியூஷ் சர்மாவின் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் பி எஸ் துமாலின் உத்தரவுப்படி, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் வைபவ் சதம் தெரிவிக்கிறார்.

2 ஆண் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்று.. கவர்மெண்ட் நர்ஸ் என்ன செய்தார் தெரியுமா? வெளியான பகீர் காரணம்.!

click me!