கடலூரில் பயங்கரம்…! ரவுடி மனைவியை போட்டு தள்ளிய 12 பேர்…

Published : Sep 19, 2021, 08:17 AM IST
கடலூரில் பயங்கரம்…! ரவுடி மனைவியை போட்டு தள்ளிய 12 பேர்…

சுருக்கம்

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்:  கடலூரில் பிரபல ரவுடியின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் குப்பன் குளம் என்ற பகுதியில் முக்கிய ரவுடிகளாக வலம் வந்தவர்கள் வீரா மற்றும் கிருஷ்ணா. இதில் தொழில்போட்டியில் கிருஷ்ணா கோஷ்டியினர் வீராவை போட்டு தள்ளினர். அதன் பின்னர் ரவுடி கிருஷ்ணா என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

இந் நிலையில் கிருஷ்ணாவின் மனைவி காந்திமதியை 12 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. அரவிந்தன் என்பவருக்கும், காந்திமதிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையில் நண்பர்களை வைத்து காந்திமதியை அரவிந்தன் கொலை செய்திருப்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

படுகொலை சம்பவத்தை தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரவிந்தன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்புடையதாக கருதப்படும் மற்றவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் குப்பன்குளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!