மதுரையில் பயங்கரம்.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. மகளின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற தந்தை.!

Published : Sep 18, 2021, 04:03 PM IST
மதுரையில் பயங்கரம்.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. மகளின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற தந்தை.!

சுருக்கம்

 இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். நாளடைவில் இந்த கள்ளக்காதல் விவகாரம் 2 பேரின் குடும்பத்திற்கும் தெரியவந்தது.

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (28). கூலித் தொழிலாளி. இவர் நேற்று சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் ராமசந்திரனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அப்பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ராமச்சந்திரன் 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலை அழகுபுரத்தை சேர்ந்த வேறு ஜாதி பெண்ணான சிவஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியை சேர்ந்தவர் பாலு. இவரது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். 2 பேருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கோபித்துக்கொண்டு தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ராமச்சந்திரன், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். நாளடைவில் இந்த கள்ளக்காதல் விவகாரம் 2 பேரின் குடும்பத்திற்கும் தெரியவந்தது.

ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை பாலு ராமச்சந்திரனிடம் கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த பாலு மற்றும் அவரது உறவினர்கள் ராமசந்திரனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மருத்துவமனையில் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!