கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் போலீசை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் போலீசை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி(32). இவர் மீது கோவை, மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்ததன. இந்நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்த வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க;- எனக்கு வயசு ஆச்சுன்னு! கழட்டி விட்டுட்டு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்!பாமக நிர்வாகி கொலையில் பகீர்
அதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சஞ்சய் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்ட்டிலும் சரணடைந்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் விசாரணைக்காக கரட்டுமடம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்தவுடன் ஆய்வாளரை நோக்கி ஒரு குண்டு சுட்டுள்ளார். நொடி பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக்கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு தான் மறைந்து விடவே மீண்டும் ஒருகுண்டு அவரை நோக்கி உன்னை கொள்ளாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு கொலைவெறியுடன் சுட்டுள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞர் திடீர் தற்கொலை! வெளியான காரணம்
உடனே தங்களை தற்காத்துக்கொள்ள வெறுவழியின்றி உடன் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் சஞ்சராஜாவின் இடதுகால் முட்டிக்கீழ் சுட்டுள்ளார். அது இடத்துக்கால் முட்டியில் படவே சஞ்சசை ராஜா சரிந்து கீழே விழுந்தார். அவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.