திருந்தி வாழ்ந்த ரவுடிக்கு நேர்ந்த பரிதாபம்... ஓட ஓட வெட்டிப் படுகொலை..!

Published : Jan 03, 2019, 02:22 PM IST
திருந்தி வாழ்ந்த ரவுடிக்கு நேர்ந்த பரிதாபம்... ஓட ஓட வெட்டிப் படுகொலை..!

சுருக்கம்

சென்னை அண்ணாநகரில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகரில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் ஓ பிளாக்கை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் தற்போது திருந்தி பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு சந்தானம் அண்ணாநகர், சத்யா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மிளகாய் பொடி தூவிய மர்ம கும்பல் சந்தானத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்விரோதம் காரணமாகவே கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.   

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு