அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி … ஓட ஓட விரட்டி கைது !!

Published : Jan 03, 2019, 10:07 AM IST
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி … ஓட ஓட விரட்டி கைது !!

சுருக்கம்

சென்னை அயனாவரத்தில் நேற்று  இரவு ஆரவாரத்துடன் அரிவாளால்  கேக் வெட்டி பிறந்தநாள்  கொண்டாடிய  இளைஞரையும் அவரது  நண்பர்களையும் போலீசார் ஓட ஓட விரடடி கைது  செய்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த அன்னனுரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது ஆவடி, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று அவர் தனது நண்பர்களுடன் அயனாவரம் சோலையம்மன் கோயில் மைதானத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார். அப்பகுனுதி வழியாக போவர் வருவோரை எல்லாம் அந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி  அரிசாளால் கேக்  வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவர்கள் கடுமையாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.இதையடுத்து போலீசார் அவர்களை  விரட்டிச்சென்று , கத்தியால் கேக்வெட்டி பிறந்நாள் கொண்டாடிய ஆவடி அன்னனூரைச்  சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது நண்பர்கள் அயனாவரம் சுனில், நிவாஸ் ஆகிய 3 பேரையும்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்