
6 மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னையில் பிரபல ரவுடி மாலைக்கண் செல்வம் கோஷ்டியில் இருந்தவர் கல்வெட்டு ரவி. இவர் மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். இதனால், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரவுடிகளின் கூடாராக தமிழக பாஜக திகழ்கிறது என பல்வேறு விமர்சங்களும் எழுந்தன.
இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.