பிரபல ரவுடி ஈவு இரக்கமின்றி ஓட ஓட விரட்டி கொடூர கொலை... ஒரே பாணியில் 2-வது படுகொலை..!

Published : Nov 11, 2019, 11:57 AM ISTUpdated : Nov 11, 2019, 11:58 AM IST
பிரபல ரவுடி ஈவு இரக்கமின்றி ஓட ஓட விரட்டி கொடூர கொலை... ஒரே பாணியில் 2-வது படுகொலை..!

சுருக்கம்

அன்பு ரஜினி நேற்று இரவு 9:30 மணியளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியுள்ளது. உயிரை காப்பாற்றுவதற்காக காரிலிருந்து அன்பு ரஜினி ஓட முயன்றார். அவரை வழிமறித்த அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினியை வெடிகுண்டு வீசியும், கத்தி அரிவாளால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் இரு ரவுடிகள் ஒரே முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு, புதுச்சேரியில் அரிவாளால் வெட்டுவதை விட்டுவிட்டு துப்பாக்கி, வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆதாரமாகத் தொடர்ந்து பல்வேறு கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அன்பு ரஜினி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ரவுடி அன்பு ரஜினிக்கும் அப்பகுதியில் உள்ள மற்றொரு ரவுடி கும்பலுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சமீப நாட்களாக இவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. 

இதையும் படிங்க;- மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதற்கு ஆதாரம் அமெரிக்காவில்... எ.வ.வேலு அதிரடி சரவெடி பேச்சு..!

இந்நிலையில், அன்பு ரஜினி நேற்று இரவு 9:30 மணியளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியுள்ளது. உயிரை காப்பாற்றுவதற்காக காரிலிருந்து அன்பு ரஜினி ஓட முயன்றார். அவரை வழிமறித்த அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- ஓடும் காரில் வைத்து இளம்பெண்ணிடம் காம களியாட்டம்... பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய கொடூரம்..!

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பு ரஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் முன்விரோதம் காரணமாக அன்பு ரஜினி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அண்மையில் அரியாங்குப்பம் சுப்பையா நகரில் ஏற்கனவே ரவுடி ஜிம் பாண்டியன் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே புதுச்சேரியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!