அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

Published : Oct 31, 2022, 09:18 AM ISTUpdated : Oct 31, 2022, 09:24 AM IST
 அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்மு (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்மு (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- அடப்பாவிங்களா.. இதுக்காகவா புதுமாப்பிள்ளை கொலை செஞ்சீங்க.. குற்றவாளிகள் சொன்ன பகீர் வாக்குமூலம்..!

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த அம்மு கடந்த சில மாதங்களாக பரணிதரனுடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அம்முவை பரணிதரன் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால், இதற்கு அம்மு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த பணிதரன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரணிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  மேட்டூரில் பயங்கரம்.. அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி தலை துண்டிப்பு.. பகீர் சிசிடிவி காட்சி.!

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி