13 சிறுமிகளுக்கு கொடுமையான முறையில் ஓயாத பாலியல் டார்ச்சர்.. ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா?

Published : Apr 05, 2022, 11:35 AM IST
13 சிறுமிகளுக்கு கொடுமையான முறையில் ஓயாத பாலியல் டார்ச்சர்.. ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சுருக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் நகரில் உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

இஸ்லாமிய பள்ளியில் 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு இந்தோனேசியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பாலியல் தொல்லை 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் நகரில் உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அப்பள்ளியில், ஹெரி வைரவன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

ஆயுள் தண்டனை

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வி உதவித்தொகையில் தங்கி படிக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் 8 மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் பாண்டுங் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியான ஆசிரியர் ஹெரி வைரவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அந்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேல்முறையீடு

இந்நிலையில், மரண தண்டனை வழங்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் மேல்முறையீடு செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நேற்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கிழமை நீதிமன்றம் வழங்கிய  ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!