மகேஸ்வரியின் கள்ளக்காதலர்களான பெரிய குக்குண்டி மற்றும் பழையனூரை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் பெரியகுக்குண்டி ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு (27) என்ற கட்டிட தொழிலாளி மகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.
ஆற்காடு அருகே காணாமல் போனதாக தேடிவந்த பெண் கட்டிட தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடிக்கடி சண்டை
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரியகுக்குண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாலாஜா அடுத்த தகரகுப்பத்தை சேர்ந்த மகேஸ்வரி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கிணற்றில் சடலம்
இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 30-ம் தேதி மகேஸ்வரி தகர குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெய்சங்கர் பல இடங்களில் தனது மனைவியை தேடினார். ஆனால், அவரை காணவில்லை. ஜெய்சங்கர் இது குறித்து ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெரியகுக்குண்டி பகுதியிலுள்ள ஒரு விவசாய கிணற்றில் சடலம் மிதப்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது உயிரிழந்தது மகேஸ்வரி என்பது உறுதியானது.
கள்ளக்காதலன் கைது
இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இது தொடர்பாக மகேஸ்வரியின் கள்ளக்காதலர்களான பெரிய குக்குண்டி மற்றும் பழையனூரை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் பெரியகுக்குண்டி ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு (27) என்ற கட்டிட தொழிலாளி மகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.மகேஸ்வரிக்கும், பிரபுவுக்கும் கடந்த 6 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் கட்டிட தொழிலாளர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து வந்தனர். மேலும் மகேஸ்வரி பிணமாக கிடந்த கிணற்றின் அருகே கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உல்லாசத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது தெரியவந்துள்ளது.