உல்லாசத்திற்கு ஸ்பெஷல் அறை.. தினமும் பாதம் பிஸ்தா.. 20 பெண்களைபலாத்காரம் செய்த துணை நடிகருக்கு குண்டாஸ்.!

Published : Apr 15, 2022, 01:53 PM ISTUpdated : Apr 15, 2022, 02:04 PM IST
உல்லாசத்திற்கு ஸ்பெஷல் அறை.. தினமும் பாதம் பிஸ்தா.. 20 பெண்களைபலாத்காரம் செய்த துணை நடிகருக்கு குண்டாஸ்.!

சுருக்கம்

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகமது ஷயாத் (27). துணை நடிகர். மாடலிங் தொழில் செய்து வந்தார். 'ஹூக்கா' எனும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆபாச சாட்டிங் இவர், தொழில் ரீதியாக தன்னுடன் பழகி வந்த 20 - 22 வயதுடைய துணை நடிகைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு  திருமண ஆசை காட்டியுள்ளார்.

திருமண ஆசை காட்டி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் முகமது ஷயாத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெண்களுடன் உல்லாசம்

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகமது ஷயாத் (27). துணை நடிகர். மாடலிங் தொழில் செய்து வந்தார். 'ஹூக்கா' எனும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆபாச சாட்டிங் இவர், தொழில் ரீதியாக தன்னுடன் பழகி வந்த 20 - 22 வயதுடைய துணை நடிகைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு  திருமண ஆசை காட்டியுள்ளார்.

செல்போனில் வீடியோ

இவர்களை, பண்ணை வீடு, நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்காகவே, தன் வீட்டில் ஒரு அறையை தயார் செய்துள்ளார். பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக செல்போனில் 'வீடியோ' எடுத்து மிரட்டி, பணம், நகை பறித்து வந்துள்ளார். உடலை ஆரோக்கியத்துடன் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, பணத்தை அதிகம் செலவு செய்துள்ளார்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இந்நிலையில், தனது வாழ்க்கையை சீரழித்த முகமது ஷயாத்துக்கு எதிராக 3 பெண்கள் புகார் ஆதாரத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  புகார் குறித்து வேப்பேரி மகளிர் போலீசார் விசாரித்தனர். முகமது ஷயாத், மார்ச் 24ல், தன்னுடன் பழகிய பெண் ஒருவரை மிரட்டி, வேப்பேரியில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே வரச்சொல்லி பணம் பறிக்க முயன்றபோது, போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில்,  20 பெண்களை அனுபவித்து இருக்கிறேன் என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.  விசாரணையில் அவர் சொன்னது உண்மை என்று தெரிய வந்திருக்கிறது.

குண்டர் தடுப்பு சட்டம்

 இதையடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவரை ஓராண்டு ஜாமினில் வெளியே வராதபடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!