வீட்டுக்கு நைசாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்..!

Published : Jul 09, 2019, 05:40 PM IST
வீட்டுக்கு நைசாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்..!

சுருக்கம்

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட முயன்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியின் அலறம் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீடு முன்பு திரண்டனர். இதை அறிந்த குமார் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். 

இதனையடுத்து, சிறுமியிடம் விசாரித்த போது, பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது உறுதியானது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு மறைந்திருந்த குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். 

குமாருக்கு ஏற்கெனவே உமா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணவன் கைதானது குறித்து பேசிய உமா, தனது கணவன் தன்னை கொலை செய்ய முயன்றதால் தான் தாய் வீட்டிற்கு வந்ததாகவும், இதுபோல் சிறுமிகளை துன்புறுத்துபவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி