ஜீவஜோதியின் வாழ்க்கையை சீரழித்த அண்ணாச்சி... ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சரில் நீதிமன்றம் வந்த ராஜகோபால்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2019, 4:22 PM IST
Highlights

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில்  சரணடைந்தார். 
 

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில்  சரணடைந்தார். 

நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. இதனால், வடபழனி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஸ்ட்ரெக்சர் மூலம் அமர வைக்கப்பட்டு அவரை நீதிபதி அறைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சரண் அடைய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ராஜகோபால் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைய விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரால் சிறையில் இருக்க முடியாதா? ஒரு நாள் கூட வெளியில் இருக்க அவகாசம் கொடுக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறி அவர் சரணடையவில்லை என்றால் காவல்துறை மூலம் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஆம்புலன்ஸில் ராஜகோபால் சரணடைந்துள்ளார். அதற்கு முன்பாக ராஜகோபால் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காட்சிகளை தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் படம் பிடித்தனர். அப்போது சரவணபவன் ஹோட்டல் காவலாளிகள் படம் பிடிக்கவிடாமல் தடுத்து கேமராவை உடைத்தனர்.

click me!