ஆம்புலன்சில் கிளம்பிய சரவணபவன் ராஜகோபால்... இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு..!

Published : Jul 09, 2019, 04:00 PM ISTUpdated : Jul 09, 2019, 04:18 PM IST
ஆம்புலன்சில் கிளம்பிய சரவணபவன் ராஜகோபால்... இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு..!

சுருக்கம்

 வடபழனி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் ஆம்புலன்சில் உயர்நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.    

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளதால், வடபழனி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் ஆம்புலன்சில் உயர்நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.  

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சரண் அடைய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ராஜகோபல் தவிர 9 பேர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.

ராஜகோபால் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைய விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரால் சிறையில் இருக்க முடியாதா? ஒரு நாள் கூட வெளியில் இருக்க அவகாசம் கொடுக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறி அவர் சரணடையவில்லை என்றால் காவல்துறை மூலம் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஆம்புலன்ஸில் ராஜகோபால் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்.

அவர் நீதிபதியிடம் நேரில் சென்று தனது உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய அவகாசம் கேட்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் நேரடியாக சிறைக்கு அனுப்படலாம்.

 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!