கோவையில் இருந்து புதுச்சேரி வந்த விக்னேஷ் மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், மனைவி ரோஜா வர மறுத்துள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் ரோஜா (29). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கணவர் விபத்தில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ரோஜா தனது தாயுடன் திருப்பூர் சென்று அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ரோஜாவுக்கு விக்னேஷ்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்..!
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கோவையில் இருந்து புதுச்சேரி வந்த விக்னேஷ் மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், மனைவி ரோஜா வர மறுத்துள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.! மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்..!
பின்னர், விக்கேஷ் தன்னைத் தானே கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிந்தார். இதன் பின், விக்னேஷும் தன்னைத் தானே கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.