பணம் வாங்கி ஏமாற்ற நினைத்த நபரை காரில் கடத்தி கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்

By Velmurugan s  |  First Published Dec 9, 2023, 5:32 PM IST

உடுமலை அருகே பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்ற நினைத்த நபரை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் சின்னசாமி என்பவருடன் காவல்துறை எஸ்.ஐ என கூறி சிலநாட்களாக பழகிவந்த சரவண வேலன் என்பவர் சென்றுகொண்டிருந்த போது காரில் வந்த சிலர் சரவண வேலனை காருக்குல் இழுத்து தள்ளி கடத்தி சென்றனர்

சின்னசாமி அளித்த புகாரின் அடிப்படையில் குடிமங்கலம்போலிசார் வழக்குபதிவு செய்து கடத்தியவர்களை தேடதொடங்கினர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சரவண வேலனை இறந்த நிலையில்  ஒருசிலர் கொண்டுவந்து சேர்க்கமுற்பட்ட தகவல் அறிந்து அங்கு சென்று அவர்களை மடக்கிபிடித்து விசாரித்தனர்.

Tap to resize

Latest Videos

தனியார் பள்ளி ஆசிரியரை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல்; திருப்பூரில் 3 பேர் அதிரடி கைது

விசாரணையில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சரவண வேலன் என்பவர் எஸ் ஐ.ஆக பணியாற்றி வருவதாகவும், தான் டிராவல்ஸும் நடத்திவருவதாகவும் கூறி சொகு சுகாரை வாடகைக்கு எடுத்துசென்று  இதுவரை காரையும் தரமால், வாடகையும் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் இது போல் பலரையும் ஏமாற்றிவந்த நிலையில் அவரை தேடி அலைந்துகொண்டிருந்தபோது குடிமங்கலம் பகுதியில் அவரைகண்டு பணம் கேட்டபோது இப்போதே தருகிறேன் என கூறிகொண்டே தனக்கு குடிமங்கலத்தில் லாட்ஜில் அறை ஏற்பாடு செய்து கொடுத்த சின்னசாமியை வர சொல்லி அவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பியபோது துரத்திசென்றுள்ளனர். 

கோவையில் கேஸ் டேங்கர் லாரி மீது சுவர் விழுந்து விபத்து; அதிகாரிகளின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

அப்போது சரவண வேலனை பிடித்து காரினுல் தள்ளி கொண்டு செல்லும் போது அடித்ததில் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாக கூறினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரவண பாண்டி, ரித்திக், முத்துசெல்வம் ஆகிய மூவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசரணை செய்துவருகின்றனர்.

click me!