அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக வகுப்பெடுத்த ஆசிரியர்... சுளுக்கெடுக்க தயாராகும் பள்ளிக் கல்வித்துறை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 24, 2021, 02:44 PM IST
அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக வகுப்பெடுத்த ஆசிரியர்... சுளுக்கெடுக்க தயாராகும் பள்ளிக் கல்வித்துறை...!

சுருக்கம்

வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறையாக வந்து பாடம் நடத்தியதாகவும், மாணவிகளை தன்னுடன் சினிமாவிற்கு வரும் படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளனர். இருப்பினும் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.  

இதையடுத்து முன்னாள் மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டவரின் புகாரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த பதிவில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறையாக வந்து பாடம் நடத்தியதாகவும், மாணவிகளை தன்னுடன் சினிமாவிற்கு வரும் படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

நள்ளிரவில் வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பது, வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்குகளை பகிர்வது என எல்லை மீறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் சோசியல் மீடியா மூலமாக பரவியதை அடுத்து திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், PSBB பள்ளி மீதான பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நேற்று இரவு இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி புகார்கள் வந்தன. உடனடியாக அதிகாரிகளை இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டேன். அதிகாரிகள் தரப்பிலிருந்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!