கொரோனா பெண் நோயாளிக்கு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை... ஐசியூவில் அத்துமீறிய அந்த 3 பேர்..!

By Thiraviaraj RMFirst Published May 20, 2021, 2:31 PM IST
Highlights

கடந்த மே 15ம் தேதியன்று 45 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாலும், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததாலும் உடனே ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பராஸ்-எச்.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் கடந்த மே 15ம் தேதியன்று 45 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாலும், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததாலும் உடனே ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அந்த பெண்ணை அந்த மருத்துவமனையில் வேலை செய்த மூன்று ஊழியர்கள் அனுமதித்த அன்று மாலை 6 மணியளவில் அவரை பாலியல் கொடுமை செய்துள்ளார்கள் என்றும் மீண்டும் மறுநாள் காலையிலும் அந்த ஊழியர்கள் அவருக்கு சர்வீஸ் செய்வது போல வந்து இந்த பாலியல் கொடுமை செய்ததாகவும் இதனை தொடர்ந்து அந்த பெண் இறந்து விட்டார் எனவும் அப்பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சம்பவம் நடந்த நாளின் மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்க்கப்பட்டது. அப்போது இது போல எந்த சம்பவமும் தங்களின் மருத்துவமனையில் நடக்கவில்லை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இறந்த பெண்ணின் மகள் இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!