சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்து கள்ளக்காதலன் தப்பியோட்டம்..!

Published : May 23, 2021, 05:38 PM IST
சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்து கள்ளக்காதலன் தப்பியோட்டம்..!

சுருக்கம்

சென்னையில் புடவையால் கழுத்தை நெரித்து கள்ளக்காதலியை கொலை செய்து தப்பிவிட்ட கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னையில் புடவையால் கழுத்தை நெரித்து கள்ளக்காதலியை கொலை செய்து தப்பிவிட்ட கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை செங்குன்றம் காந்தி நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(40). இவர் கட்டிட தொழிலாளி இவரின் மனைவி மோகனா(36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த செக்யூரிட்டி தாஸ் என்பவருடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று மாலை மோகனா சமையல் செய்துகொண்டிருந்த போது தாசுக்கும் மோகனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபம் அடைந்த தாஸ் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு வேகமாக வெளியே சென்றுவிட்டார். அவர் ஆக்ரோஷத்துடன் செல்வதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது சேலையால் கழுத்து இறுக்கப்பட்டிருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அப்பகுதி மக்கள் உடனே சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது புடவையால் கழுத்தை நெரித்து மோகனா கொல்லப்பட்டிருந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!