அடச்சீ கருமம் கருமம்.. மதபோதனை என்ற பெயரில் 19 வயது பெண்ணை தாயாரே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்.!

Published : Jul 13, 2021, 07:42 PM IST
அடச்சீ கருமம் கருமம்.. மதபோதனை என்ற பெயரில் 19 வயது பெண்ணை தாயாரே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்.!

சுருக்கம்

மத போதகரான லால் ஷைன் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு  இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கன்னியாகுமரி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ மதபோதகர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத போதகரான லால் ஷைன் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு  இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தேவாலயத்தின் போர்வையில் அங்கு பாலியல் தொழில் செய்யப்படுவது தெரியவந்தது.

 அங்கு இருந்த தாய், மகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் லால் ஷைன் சிங் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லால் ஷைன் சிங், ஷிபின் ஆகியோர் அந்த பெண்களோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், 19 வயது பெண்ணை அவரது தாயாரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!