கோவையில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த ஆசிரியர்கள் இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறாா்கள். இந்த பள்ளியின் நிர்வாக அதிகாரியாக கணபதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 34), உடற்கல்வி ஆசிரியராக வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன் (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். முரளிதரனுக்கு திருமணமாகிவிட்டது. விஜயகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர்கள், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல் நிலை பாதிப்பு..! ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணான 1098க்கு தொடர்பு கொண்டு பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர் மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்
விசாரணையில் நிர்வாக அதிகாரி விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார், முரளிதரன் ஆகியோர் மீது கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதில் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்றும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.