சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

Published : May 20, 2023, 02:50 PM IST
சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

சுருக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன்.  இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இரப்பது தெரியவந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 பேர் பலி; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கர்ப்பத்திற்கு காரணமானவரையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறுமி சென்று வில்வேந்திரனிடம் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். அப்போது வில்வேந்திரன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  சிறுமியின் குடும்பத்தினர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

50 ஆண்டு பழமையான மரத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தனியார் பள்ளி ஆசிரியரான வில்வேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!