
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உடுமாபாராவைச் சேர்ந்த மேக்கப் நிபுணர் தேவிகா. திருமணமான இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவருக்கு காசர்கோடு மாவட்டம் போவிக்கானம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் உடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. சதீஷும் திருமணம் செய்துகொண்டு மனைவி, குழந்தையுடன் இருப்பவர்.
இந்நிலையில் சதீஷ் தேவிகாவை கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கொன்றவுடன் ஆவூரில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களைச் சேகரித்துள்ளனர்.
Who is DK Shivakumar?: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?
சதீஷ் - தேவிகா இருவரும் சென்ற 9 வருடங்களுக்கும் மேலாக கள்ள உறவில் இருந்துவந்துள்ளனர். சதீஷுடன் பழகிவந்ததில் அவரது குழந்தையை தேவிகாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. குழந்தையைத் தானே வளர்க்க விரும்பிய தேவிகா சதீஷிடம் மகளை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டிருக்கிறார். அதற்கு சதீஷ் சம்மதிக்காதபோதும், விடாமல் நச்சரித்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் இருவரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்துவந்தனர். இச்சூழலில் ஒருநாள் ஒரு தனியார் விடுதியில் இரண்டு பேரும் சந்தித்தனர். அப்போது மீண்டும் தனக்குக் குழந்தை வேண்டும் என தேவிகா அடம்பிடித்திருக்கிறார். பொறுமை இழந்த சதீஷ் ஆத்திரத்தில் அறையில் இருந்த கத்தியை எடுத்து சட்டென்று தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.
தேவிகா தன்னை நிம்மதியாக இருக்கவிடாமல் தொடர்ந்து தனது குழந்தையை கேட்டதால், தாங்கிக்கொள்ள முடியாமல் கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் சதீஷ். கொலை நடந்த தனியார் விடுதிக்குப் போய் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், தேவிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சரண் அடைந்த சதீஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
ரூ.600 கோடி புதையல் இருப்பதாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பல்