வீட்டில் இருந்து 600 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் பணத்தை எடுக்க முடியும் எனக் கூறியவர்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாந்து போனதுடன் போலீசாரிடமு் வசமாகப் பிடிப்பட்டனர்.
ராஜஸ்தானில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் இருப்பதாகக் கூறி நுழைந்து, கொள்ளையடிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த் 15 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கர்னி விஹாரில் வெள்ளிக்கிழமை இரவில் இந்த சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கும் இரண்டு முக்கிய குற்றவாளிகளான ராமேஷ்வர் ரதி மற்றும் ராம்தயாள் மீனா ஆகியோருக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. அவர் முன்பு ரதி மற்றும் மீனா மீது வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இருவர் மீதும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்காததால் போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால், தாங்கள் அவமதிக்கப்பட்டதாக எண்ணிய மீனாவும் ரதியும் தங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.
பெண் கேட்டு தரமறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்; விழுப்புரத்தில் பரபரப்பு
இதற்காக, ஷிபா பானோ என்ற பெண் மந்திரவாதியை அணுகினர். அவர் பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருந்து 600 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் பணத்தை எடுக்க முடியும் எனக் கூறினார். பின், ஷிபா பினோ சுனில் குமார் சைன் என்ற மற்றொரு மந்திரவாதியின் உதவியைப் நாடினார். சைன் அஜ்மீரைச் சார்ந்த அவர் வீட்டில் புதையல் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிய வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்டார்.
இருவரும் தங்களுக்கு உதவி செய்வோருக்கு ரூ. 120 கோடி தருவதாக உறுதியளித்து, ஒரு மினி லாரியை வாடகைக்கு எடுத்து, அழைத்துச் சென்றனர். கேஸ் கட்டர் போன்ற கருவிகளுடன் சென்ற அவர்கள் முழு வீட்டையும் சூறையாடிய பிறகு, ஒரு சில மொபைல் போன்கள் மற்றும் பழைய எலக்ட்ரானிக் சாதனங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. அவர்கள் சொன்னது போல ரொக்கமோ தங்கமோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டு கட்டாக பணத்தையும் தங்கப் பெட்டிகளையும் திருடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒரு டிரக்குடன் வந்து ஏமாந்து போனார்கள்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் 15 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளனர். மீனா, ரதி, சைன் மற்றும் பானோ தவிர, ஷாஜத், நதீம் சைஃபி, ரவி பாண்டே, ஜிதேந்திர குமார் ஜாங்கிட், ரமேஷ் போஜ்வானி, பூரன் மால் சைனி, ரோஹிதாஷ் ஜாட், பிரகாஷ் சந்த் சைனி, பாபு லால் சைனி, கிஷோர் சிங் ஆகியோரை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு நபர் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் கூறகின்றனர்.