கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டு.. புருஷன் கூப்பிட்டதுமே போய்டுவியா.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்

By vinoth kumar  |  First Published Jul 7, 2022, 10:42 AM IST

 பிரவுசிங் சென்டரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடையின் உரிமையாளர் அருணாச்சலம் (28)  என்பவருடன் அந்த பெண்ணுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றிதிரிந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அருணாச்சலம் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்துள்ளார்.


கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த பெண், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் அவரது கணவருக்கு ஆபாச படம் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் எம்ஜிஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இதையடுத்து கொளத்தூர் அண்ணாசிலை பகுதியில் உள்ள பிரவுசிங் சென்டரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடையின் உரிமையாளர் அருணாச்சலம் (28)  என்பவருடன் அந்த பெண்ணுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றிதிரிந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அருணாச்சலம் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஊதாரித்தனமாக செலவு செய்த மகனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய தந்தை.. வெளியான பகீர் தகவல்.!

ஒருகட்டத்தில் அப்பெண், அருணாச்சலத்தை திருமணம் செய்துக்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் அருணாச்சலம் அடிக்கடி அப்பெண்ணின் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண் பிரிந்துபோன கணவருடன் மீண்டும் சேர்ந்துவாழ ஆரம்பித்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் அருணாச்சலம் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் கோபம் அடைந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு கணவருடன் மீண்டும் வாழப்போகிறாயா என அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துதுள்ளார்.

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

இதனால் அப்பெண் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.  இதனிடையே தன்னுடன் அப்பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், இதுசம்பந்தமாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அருணாச்சலத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!