சரக்கடிக்க பணம் தராத தந்தை.. கழுத்து அறுத்து கொன்ற பரபரப்பு சம்பவம்

Published : May 28, 2022, 03:36 PM IST
சரக்கடிக்க பணம் தராத தந்தை.. கழுத்து அறுத்து கொன்ற பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

ஸ்ரீபெரும்புதுாரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்து தப்பியோடிய போதை மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமு, 45. ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ், 20, கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில தினங்களுக்கு முன், தினேஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையை தொடராமல் வீட்டிற்கு திரும்பி விட்டார். கஞ்சா மற்றும் மதுவுக்கு பணம் கேட்டு, பெற்றோரிடம் அடிக்கடி தினேஷ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் துாங்கி கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின் தினேஷ் தலைமறைவானார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் பதுங்கிஇருந்த தினேஷை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். செலவுக்கு பணம் தராமல் திட்டியதாலும், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாலும் தந்தையை கொலை செய்ததாக, தினேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : இதையும் படிங்க : RAIN : அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அப்டேட் !!

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!