வன்முறை கும்பலிடம் சிக்கிய போலீஸ் அதிகாரி...!! உயிரை கொடுத்து காப்பாற்றிய இஸ்லாமிய முதியவர்... மனதை உருக்கும் நெகிழ்ச்சி...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2019, 1:34 PM IST
Highlights

அவரது வீட்டில் என்னை  தங்க வைத்து தண்ணீர் கொடுத்து, மாற்று துணிகளையும் கொடுத்தார் .   அத்துடன் நான் அங்கு பத்திரமாக இருப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார் .
 

வன்முறை கும்பலிடம் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில்  தவித்த காவல் அதிகாரியை ஹஜ் காதீர் என்ற இஸ்லாமியர்  மீட்டு  தன் வீட்டில் தங்க வைத்து பத்திரமாக காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  தன் உயிரை காப்பாற்றி ஆண் தேவதை  ஹஜ் காதீர் என அந்த காவலர்   மனமுருகி  இஸ்லாமிய முதியவரை  பாராட்டியுள்ளார்.    நாடு முழுவதும் இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகிறது . இந் நிலையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது அஜய்குமார் என்ற போலீஸ் அதிகாரி வன்முறை  கும்பலிடம் சிக்கிக் கொண்டார் . 

அப்போது அவரை சுற்றிவளைத்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது அப்போது அங்கிருந்த காதிர் என்பவர் அந்த வன்முறை கும்பலிடமிருந்து அஜய் குமாரை மீட்டு  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.   பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு அந்த காவலரை காவல்நிலையம் வரை கொண்டு சென்று பத்திரமாக விட்டு வந்துள்ளார் . இந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட அந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தை பகிர்ந்துள்ளார் அந்த காவலர், அதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது   நான் அந்த வன்முறை கும்பலிடம் சிக்கி பலத்த காயமுற்றிருந்தேன்,  அப்போது அந்த கும்பலிடமிருந்து மீட்டு என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்  ஹஜ் காதீர்,  என் கை ,  தலை ,  கால் ,  என அனைத்திலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது  அவரது வீட்டில் என்னை  தங்க வைத்து தண்ணீர் கொடுத்து, மாற்று துணிகளையும் கொடுத்தார் .   அத்துடன் நான் அங்கு பத்திரமாக இருப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார் . 

பின்னர்என்னை  பத்திரமாக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டார் .  என் வாழ்வில்  மறக்க முடியாத ஆண் தேவதை போல வந்து என்னை காப்பாற்றினார் . இல்லையென்றால் நான் அங்கு கொலை செய்யப்பட்டிருப்பேன்  என அச்சம்பவம் குறித்து அவர் நினைவுகூர்ந்தார் .  இது குறித்து தெரிவித்துள்ள  ஹஜ் காதீர்  நான் தொழுகை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு வன்முறைக் கும்பல் போலீஸ் அதிகாரியை சுற்றிவளைத்து தாக்குவதை கண்டேன்.  அந்த போலீஸ் அதிகாரிக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது  அப்போது அவரை நான் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தேன் ,  அந்த நேரத்தில் அவரது பெயர் கூட எனக்கு தெரியாது நான் மனித நேயத்தின் அடிப்படையில்  உதவினேன் என தெரிவித்துள்ளார் .  ஹஜ் காதீர் போன்ற மனித நேயர்கள் இன்னும் நம்நாட்டில் இருப்பதால்தான் இன்னும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறது. 
 

click me!