6 வயது சிறுமியை கதறவிட்டு கொன்ற காமுகனுக்கு தூக்கு தண்டனை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Published : Dec 27, 2019, 03:30 PM IST
6 வயது சிறுமியை கதறவிட்டு கொன்ற காமுகனுக்கு தூக்கு தண்டனை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

சுருக்கம்

கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-ம் தேதி 6 வயது சிறுமி கொடூரமான முறையில் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு தரப்பினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கியுள்ளது. 

கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-ம் தேதி 6 வயது சிறுமி கொடூரமான முறையில் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு தரப்பினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் தெள்ளத்தெளிவாக நிரூபணமானதால் அவர் குற்றவாளி என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார். அவருக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தற்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 302 பிரிவின் கீழ் தூக்குத் தண்டனையும் வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு