
பிறகு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி திடீரென சிறுமி மாயமானதால், அவரது பெற்றோர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடிவந்தனர்.
இந்நிலையில் தினகரன் தன் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று 13ம் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தினகரனை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் 14 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த குற்றத்திற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் பிள்ளைகள் சிறுவயதில் முகநூலில் தவறான நபர்களுடன் பழக்கம் வைத்து தங்களது வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் என்றும், பெற்றோர்கள் பெண் குழந்தைகளுடன் கணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.