
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு டேட்டிங் ஆப் மூலம் நைஜீரிய நாட்டை சேர்ந்த எனுகா அரின்சி எபெனாஎன்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பழகும் போது எனுகா அரின்சி எபெனா விமானியாக இருப்பதாக அந்த பெண்ணிடம் தெரிவித்து இருக்கிறார்.
எனுகா அரின்சி கேரள பெண்ணுடன் நெருங்கி பழகியதோடு திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த பெண்ணுக்கு உறுதி அளித்தார் என கூறப்படுகிறது. மேலும் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், இந்தியா வரும்போது, அதனை இளம்பெண்ணுக்கு தருவாகவும் கூறியுள்ளார். எனுகா அரின்சி எபெனாவின் வார்த்தையை நம்பி அந்த இளம்பெண், அவரது வருகைக்காக காத்திருந்தார்.
விமான நிலையம்:
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் எனுகா அரின்சி எபெனா இந்தியா வந்துள்ளதாக கேரள பெண்ணிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் வரும் போது தான் ரூ. 1 கோடியே 50 லட்சம் பணம் கொண்டு வந்ததாகவும், அதனை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றி விட்டதாக கூறி இருக்கிறார்.
அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை மீட்க ரூ.10 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனை அப்படிய நம்பிய கேரள பெண், பல வழிகளில் முயற்சி செய்து பல பரிமாற்றங்களின் மூலம் நைஜீரியா வாலிபரின் வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சத்தை அனுப்பி இருக்கிறார்.
பண பரிமாற்றம்:
இதை அடுத்து, மீண்டும் கேரள பெண்ணை தொடர்பு கொண்ட எனுகா அரின்சி எபெனா கூடுதலாக ரூ.11 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதையும் இளம்பெண் அப்படியே நம்பியதோடு, மேலும் ரூ. 11 லட்சம் பணத்தை அனுப்ப வங்கிக்கு சென்றுள்ளார். அதிக பண பரிமாற்றம் நடபத்தை பார்த்து சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
வங்கி அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளம்பெண்ணிடம் விசாரிணை மேற்கொண்டனர். அப்போது அவர் நைஜீரிய வாலிபர் பற்றிய தகவல்களை கூறியுள்ளார். போலீசாருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு விசாரனை செய்தனர். இதில் கேரள பெண் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கைது:
கேரள பெண்ணை ஏமாற்றிய வாலிபர் டெல்லி அருகே நொய்டாவில் தங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த தகவல்களை அறிந்த கேரள போலீசார் உடனே டெல்லிக்கு விரைந்து சென்று எனுகா அரின்சி எபெனா தங்கி இருந்த அறையை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த தப்பிக்க முயன்ற எனுகாவை கேரள போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை கேரளா அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எனுகா அரின்சி எபெனா டெல்லியில் குடும்பத்துடன் தங்கி இருப்பதும், இதுபோல பலரையும் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை ஆலப்புழா நீதமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.