Trichy Gun shots: ரவுடி கலைப்புலி ராஜா மீது போலீஸ் துப்பாக்கி சூடு.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

Published : Jul 05, 2024, 02:39 PM ISTUpdated : Jul 05, 2024, 03:10 PM IST
Trichy Gun shots: ரவுடி கலைப்புலி ராஜா மீது போலீஸ் துப்பாக்கி சூடு.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

நவீன்குமார், ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

திருச்சி சிறுகனூர் வனப்பகுதியில் ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வஉசி நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் ஆதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைபுலி ராஜா(27). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை! மருமகனை ஆணவக்கொலை செய்ய கூலிப்படை ஏவிய மாமனார்! 3 பேர் மீது குண்டாஸ்!

இந்நிலையில் ராஜா மற்றும் நவீன் குமார் இருவர்களின் நண்பருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்றைய தினத்தில் இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீன் குமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கலைபுலி  ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமார் வெட்டி படுகொலை செய்தனர்.  

இதையும் படிங்க:  எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. சேலத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

இச்சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த  கலைபுலி ராஜாவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே கலைபுலி ராஜா சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த கலைப்புலி ராஜாவை பிடிக்க முயன்றனர். அப்போது அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றார்.  இதனால் போலீசார் தற்காப்புக்காக  ராஜாவின் வலது காலில் சுட்டனர். இதனால் படுகாயமடைந்த ராஜா ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?