போதை ஊசி போட்டுக்கொண்ட இளைஞர்கள் கைது… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 11:39 PM IST
Highlights

ஈரோடு அருகே போதை மாத்திரையை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்திக்கொண்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஈரோடு அருகே போதை மாத்திரையை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்திக்கொண்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சட்டவிரோதமாக இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தியூர் கருப்பசாமி கோவில் பகுதியில் இளைஞர்கள் சிலர், வித்தியாசமான முறையில் போதை மருந்தை எடுத்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு சில இளைஞர்கள், சிரஞ்சி மூலம் போதை ஊசி செலுத்திக்கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.

இதையும் படிங்க: லாட்ஜில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. டிக் டாக் பிரபலத்தை தூக்கிய போலீஸ் !

அவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், சசிகுமார், யுவராஜ், விக்னேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர், டெல்லியில் இயங்கிவரும், நிறுவனம் ஒன்றிலிருந்து, கூரியர் மூலம், 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அதனை கருப்பசாமி கோவில் அருகே சென்று தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் கைகளில் செலுத்தி கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரூபாய் 14 ஆயிரம் செலுத்தி மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: உனக்கு என் தங்கச்சி கேட்குதாடா..? காதலனை பீர் பாட்டிலால் குத்தி கிழித்த அண்ணன்.

இவர்கள் பயன்படுத்தியது மட்டுமின்றி அந்தியூர் பகுதியில் விற்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகள் கொண்ட பத்து அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீசார் சுற்றி வளைத்த போது அங்கிருந்து தப்பி ஓடிய பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று சித்தோடு பகுதியில் வினித்குமார் மற்றும் திலீப்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

click me!