
பவளப்பாறை விற்பனை
கடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. கடல் என்பது உப்பு நீரும், வெறும் கழிவுகளை கொட்டும் இடமும் மட்டும் அல்ல. அது, காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிர்கள், பாலுாட்டிகள் என, பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது.இவற்றில், கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது, பவளப்பாறைகள். இவை, கடலின் தட்பவெப்பத்தை பேணிக் காக்கவும், கடல் பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. இந்நிலையில் கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த சாம்சன் செல்வகுமார் (43) என்பவர் பழமையானநாணயங்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்களுடன் சிவப்பு நிற பவளப்பாறைகளை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரியவந்தது.
கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி
ஒரு கிராம் ரூ.2500
ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை செல்வபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டு உளவு பிரிவு காவல் துறை அதிகாரிகள் செல்வக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அரிய பவளப்பாறையை போலீசார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பவள பாறை விற்பனை குறித்து கோவையை சேர்ந்த சாம்சன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிவப்பு பவள பாறை உலகிலேயே அந்தமான் தீவு பகுதிகளில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. சந்தையில் ஒரு கிராம் பவளப்பாறை 2500 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்