தூத்துக்குடியில் பழிக்குபழிவாங்க பிரபல ரவுடியை 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ரவுடி கொலை
தூத்துக்குடி அருகே உள்ள சங்கர் பேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் மீது மூன்று கொலை, கொள்ளை, அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் குடும்பத்தினருடன் கருப்பசாமி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பத்து பேர் கொண்ட மர்ம கும்பல்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கருப்பசாமி வீட்டிற்குள் புகுந்துள்ளது. அப்போது கருப்பசாமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. உறவினர்கள் கண் முன்பே சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்து துடி துடித்துள்ளார்.
மர்ம கும்பலை தேடும் போலீசார்
இது தொடர்பாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்த விரைந்து வந்த போலீசார் கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையில் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2017ம் ஆண்டு அங்குசாமி என்பவரை கொலை செய்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. கருப்பசாமியை கொலை செய்து தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல ரவுடியை வீட்டுற்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டிய சிறுவன்.. இன்ஸ்டாகிராம் காதல் - அதிர்ச்சி சம்பவம் !