ராணிபேட்டையில் பள்ளி மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

By Velmurugan s  |  First Published Jan 28, 2023, 4:48 PM IST

ராணிபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


ராணிபேட்டை மாவட்டம் ராணிபேட்டை அடுத்த பாரதி நகர் காட்டன் பஜார் தெருவைச் சேந்தவர் சுந்தர்ராஜ் (வயது 28). சிப்காட்டில் உள்ள  தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஓட்டுநர் சுந்தர்ராஜ்க்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் பணி புரியும் நிறுவனத்தில் கொரோனா காலத்தில் அக்ராவரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு  சேர்ந்து சில மாதங்கள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 

150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

Tap to resize

Latest Videos

இந்நிலையில் அப்போது சுந்தர்ராஜனுக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து 10ம் வகுப்பு பள்ளி  படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஓட்டுநர் சுந்தர்ராஜ் அவரை வெளியூர் அழைத்து சென்றுள்ளார். 

 அமைச்சர்கள் பணம் கேட்டால் கொடுங்கள்; மேடையிலேயே கமிசன் குறித்து பேசிய டி.ஆர்.பாலு

பின்னர் அங்கு சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்  தங்கள் மகளை காணவில்லை என்று சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி சிறுமி மற்றும் தனியார் நிறுவன ஓட்டுநர் சுந்தர்ராஜ் இருவரையும் கண்டுபிடித்தனர். இருவரும் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவல்  ஆய்வாளர் வாசுகி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் ராஜ்குமாரை போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

click me!