இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

Published : Sep 30, 2022, 05:54 PM IST
இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

11ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறுமியின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

படிப்பதை தவிர, சிறுமி இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அப்பொழுது  சிறுமிக்கும், அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது.

இதையும் படிங்க..‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். தொடர்ந்து, இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

கழிவறையில் தங்களது மகள் குழந்தையுடன் மயங்கி கிடந்ததை அடுத்து, இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!