என் புருஷனை கொல்லுடா.. நாம சந்தோஷமா வாழலாம்.. கள்ளக் காதலனுக்கு ஸ்கெச் போட்டு கொடுத்த மனைவி.

Published : Jun 01, 2022, 08:58 PM IST
என் புருஷனை கொல்லுடா.. நாம சந்தோஷமா வாழலாம்.. கள்ளக் காதலனுக்கு ஸ்கெச் போட்டு கொடுத்த மனைவி.

சுருக்கம்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு மது ஊற்றி  கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேஷம் மாநிலம் போஜ்பூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. 

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு மது ஊற்றி  கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேஷம் மாநிலம் போஜ்பூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் பிஜினா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அவரது மனைவி மற்றும் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் திங்கட்கிழமை காதலர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னரே இந்த படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனைவியின் வேண்டுகோளின் பேரில் காதலன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ரமேஷை மது குடிக்க வைத்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்துள்ளது.  அதன்பிறகு சடலம் காட்டி வீசப்பட்டது, 

போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜினா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், (30)  மே 24 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர், மே 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை பக்கத்து கிராமமான சக்போகம்பூரைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவரின் வயலில் ரமேஷின் உடல் கிடந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதில் சந்தேகத்தின்பேரில் ரமேஷின் சகோதரர் ராத்தே ஷ்யாம் தஹ்ரீர்  மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரின்கு, சுசிகி என்கிற பிந்து மற்றும் மனோஜ் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரமேசை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். போலீஸ் விசாரணையில் ரமேஷின் மனைவி சீமா சுசிகி என்ற பிந்து உடன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக  கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இது ஒரு கட்டத்தில் ரமேஷிற்கு தெரிந்தது, இந்நிலையில் சிமாவை அடித்து உதைத்தார். இதனால் கணவன் ரமேஷை கொள்ளுமாறு சீமான் தனது காதலன் பிந்துவிடம் கூறினார். அதன்பிறகு இருவரும் மெஹ்ராதாபாத்தில் ஒன்றாக வாழ திட்டமிட்டனர்.

இந்நிலையில்  கள்ளக் காதலன் சுசிகி என்கிற பிந்து தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷை கொள்ள திட்டமிட்டார். சம்பவத்தன்று ரமேஷ்க்கு போன் செய்த  ரின்கு மது அருந்த வருமாறு சக்பேகம்பூர் வரவழைக்கப்பட்டார், அங்கு கள்ளக் காதலன் சுசிகி (எ) பிந்து, மனோஜும் வந்தனர், நான்கு பேரும் காட்டில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது ரமேஷிற்கு போதை தலைக்கு ஏறியது, அப்போது 3 பேரும் சேர்ந்து ரமேஷின் கழுத்தை நெரித்து கொன்றனர். இதனை அடுத்து அவரது சடலத்தை ஓம் பிரகாஷின் வாயிலில் வீசினர். இந்நிலையில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி