
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் சடலத்தை காரில் தூக்கிச்சென்று மனைவி ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பெரும்பாலான கொலை, தற்கொலை சம்பவங்கள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. அதில் பெரும்பாலான கொலைகளுக்கு மனைவிமார்களே மூளையாக செயல்படுவதும் அரங்கேறி வருகிறது
அந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கணவனை கள்ளக் காதலனுக்காக மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கன்னேறுவரம் மண்டலம் குண்டல பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (45) இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், வெங்கட ரெட்டி திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சமையல்காரராக இருந்துவந்தார். லட்சுமி மளிகை கடை மற்றும் பெல்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொட்ல பள்ளியை சேர்ந்த போனகிரி வெங்கடசாமி என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். கணவன் இல்லாத நேரங்களில் லட்சுமி வெங்கடசாமி இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் கணவன் வெங்கட் ரெட்டிக்கு தெரிந்தது. இதனால் அவருக்கும் லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் கணவனை தீர்த்துக்கட்ட லட்சுமி முடிவு செய்தார். கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலைக்கு திட்டம் தீட்டினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெங்கட் ரெட்டி வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அப்போது மனைவி லட்சுமி அவரை கல்லால் தாக்கி கொன்றார். அப்போது கள்ளக்காதலன் காரில் கணவன் வெங்கட ரெட்டி சடலத்தை துணியால் சுற்றி சித்திப் பேட்டை மாவட்டம் ஹூஸ்னா பாத் மண்டலம் பெட்லப் பள்ளி ஆற்றங்கரையில் புதைத்தனர். ஆனால் இந்த விஷயத்தில் தாமும் போலீசில் அகப்பட்டு கொள்வோம் என அஞ்சிய வெங்கடசாமியின் கார் ஓட்டுநர் குமார் போலீசில் சரணடைந்தார். இந்நிலையில் அவர் கொடுத்த தகவலின்படி கள்ளக் காதலன் வெங்கடா சாமி மற்றும் காதலி லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, வெங்கட் ரெட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கரிம்நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.