புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபியை சந்தித்து மனு அளித்தனர்.
கடந்த மாதம் 2ம் தேதி புதுச்சேரி சோலை நகரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி திடீரென மாயமானார் போனார். சிறுமி மாயமான 2 நாட்கள் கழித்து வீட்டருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். காவல் துறையினரின் விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்து வாய்க்காலில் வீசிய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
நீ இல்லாத உலகத்துல எனக்கு என்ன வேலை.. விபத்தில் உயிரிழந்த காதலன்.. அடுத்த நொடியே காதலி தற்கொலை!
இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி கலைச்செல்வனை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் சம்பவம் நடந்து 30 நாட்கள் கடந்த நிலையிலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையோ அல்லது உடற்கூறாய்வு அறிக்கையோ கேட்டும் இதுவரை காவல் துறையினர் வழங்கவில்லை. எனவே இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும், இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு அறிக்கை தயாரித்த மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி.ஐ சந்தித்து புகார் மனு அளித்தனர்.