எனக்கு 2 குழந்தைகள் இருக்கு! இதெல்லாம் வேண்டாம் சொன்ன மசாஜ் சென்டர் பெண்! 25 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை!

By vinoth kumar  |  First Published Apr 2, 2024, 11:15 AM IST

கொல்கத்தாவை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம்(42). இவர் ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்துள்ளார்.  இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளது. 


திருமணம் செய்ய மறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் 25 முறை கத்தியால் குத்தி கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான்(35). கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம்(42). இவர் ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்துள்ளார்.  இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுடன் ரியான் கானுக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை! கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலம்!

இந்நிலையில், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஷாலினி பூங்காவில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மசாஜ் சென்டர் வேலையே விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரீஷ் கூறியுள்ளார். 

இதையும் படிங்க:  சரக்கு லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் கள்ளக்காதலன் தற்கொலை.. நடந்தது என்ன?

ஆனால் அந்த பெண் தனக்கு 2 குழந்தைகள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த கிரீஷ் தான் மறைத்து வைத்த கத்தியால் முகம், வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் கிரீஷ் சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரிதா கானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரீஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!