அண்ணியுடன் ஏற்பட்ட விபரீத காதல்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி.

Published : Aug 27, 2022, 05:55 PM ISTUpdated : Aug 27, 2022, 06:01 PM IST
அண்ணியுடன் ஏற்பட்ட விபரீத காதல்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி.

சுருக்கம்

அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனையே தம்பி அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.  உத்திரபிரதேசம் மாநிலம் சாத்தனா  மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனையே தம்பி அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.  உத்திரபிரதேசம் மாநிலம் சாத்தனா  மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- உத்தரபிரதேச மாநிலம் சத்னா அடுத்துள்ள பீஹாராபூரை சேர்ந்தவர் ராஜோல் (28) இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து சில மாதங்கள் வரை குடும்பம் மகிழ்ச்சியாக சென்றது, திருமணம் நடந்த ஒரே வருடத்தில் காயத்ரிக்கு ராஜோலின் தம்பி தீரஜ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து தீரஜ்ஜூம் காயத்ரியும் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். நான்கு ஆண்டுகளாக அண்ணன் ரஜோலின் வீட்டில் இல்லாத போதெல்லாம் அண்ணி காயத்திருயுடன் தனிமையில்உல்லாசம் அனுபவித்து வந்தார். கள்ளகாதல் விவகாரம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தது. இதனால் காயத்ரியும் தீரஜ்ஜூம் ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது என குடும்பத்தினர் கட்டுப்பாடு விதித்தனர்.

இதையும் படியுங்கள்: வாடகைக் காதலியை பளார் பளார் என அறைந்த போலீஸ் எஸ்.ஐ.. நிர்வாணமாக நிற்க போவதாக மிரட்டிய இளம் பெண்.

ஆனால் கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் மனைவி காயத்திரியால் இருக்க முடியவில்லை, தனது உல்லாசத்திற்கு கணவன் ராஜோல் தடையாக இருப்பதாக எண்ணிய காயத்ரி அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார், தனது யோசனையை கள்ளக்காதலன் திராஜ்ஜிடம் கூறினார்,  தீரஜ்ஜூம் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.  ரஜோலை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் காத்திருந்தனர், இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காயத்ரி தனது கணவர் ராஜோலுக்கு பாலில் பூச்சி மருந்து கலந்து  குடிக்கக் கொடுத்தார், ஆனால் பாலியல் துர்நாற்றம் வீசியதால் கணவர் பால் குடிக்கவில்லை,

இதையும் படியுங்கள்: சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

இதனையடுத்து காயத்ரியின் தாய் வீட்டிற்கு போன் செய்த ராஜோல் தயவு செய்து தங்கள் மகளை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறினார், இதனையடுத்து  15 நாட்களுக்கு மேல் காயத்திரி மாமியார் வீட்டில் இருந்து வந்தார், பின்னர் இரு வீட்டாருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இருவரும் பழைய தவறுகளை மறந்து கணவன்-மனைவியாக வாழவேண்டுமென பெரியவர்கள் கூறினர், இதனால் காயத்திரியை ராஜோல் ஏற்றுக் கொண்டால், இதனால் கள்ளக்காதலன் தீரஜ்ஜூம் அண்ணி காயத்திரியும் சேர்ந்து அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கணவன்  ராஜோல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது காயத்ரியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர்.

இதனையடுத்து தீரஜ் தலைமறைவானார், மனைவி மட்டும் ராஜோல் உடலின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார், சந்தேகமடைந்த போலீசார் தீரஜ் எங்கே என தேடினார், ஆனால் எங்கு தேடியும் தீரஜ் இல்லை,  கொலை செய்தது தீரஜ்தான் என்பதை உறுதி செய்து கொண்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர், பின்னர் பண்ணை வீடு ஒன்றில் பதுங்கி இருந்தார், அப்போது போலீசாரை பார்த்ததும் ஓடத் தொடங்கினார், பின்னர் அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனை கொலை செய்ததாக கூறினார். பின்னர் மனைவி காயத்ரி மற்றும் தீரஜ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .

 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை