ஈவு இரக்கம் இல்லாமல் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை? கிணற்றில் சடலமாக மீட்பு...!

Published : Jun 10, 2021, 05:56 PM IST
ஈவு இரக்கம் இல்லாமல் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை? கிணற்றில் சடலமாக மீட்பு...!

சுருக்கம்

பெரம்பலூர் அருகே மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெரம்பலூர் அருகே மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள்கள் இளையதர்ஷினி(20), நிஷா தர்ஷினி(13), மகன் ஹரி (10). மூத்த மகள் இளையதர்ஷினிக்கு திருமணமாகி பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பெருமாள் கோவில் தெருவில் கணவர் அருள்பாண்டியன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நிஷாதர்ஷினி கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாடபுரத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அவரை கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை. இதுதொடர்பாக நிஷாதர்ஷினியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

 

இந்நிலையில், நேற்று லாடபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள வயல் கிணற்றில் நிஷா தர்ஷினி சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி