திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல்லடம் அருகே 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்லமுத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, முக்கிய குற்றவாளியான ராஜ்குமார், சோணை முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
undefined
இதையும் படிங்க;- அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை.. சாப்பிட்டவரின் நிலை என்ன?
மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி ஐயப்பனின் மூத்த மகனும் ராஜ்குமாரின் அண்ணணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை திருப்பி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதையும் படிங்க;- காதலியின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலன்! நடந்தது என்ன?
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் வெங்கடேஷிற்கு வலது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். இதனைத்தொடந்து முதலுதவி சிகிச்சை முடித்த பின்னர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வெங்கடேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.