கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த பினு ஜேக்கப். இவரது மகள் அல்கா அன்னா பினு (20). இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு பசில் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலி தன்னுடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் ஆத்திரத்தில் காதலன் வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த பினு ஜேக்கப். இவரது மகள் அல்கா அன்னா பினு (20). இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு பசில் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரண்டு வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்த போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென பசிலிடம் பேசுவதை அல்கா அன்னா பினு தவிர்த்து வந்துள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்! தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி! கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
இதனால், ஆத்திரமடைந்த பசில் கடந்த 5ம் தேதி அல்கா வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற குடும்பத்தினருக்கும் வெட்டு விழுந்தது. இதனையடுத்து பசில் அங்கிருந்து தப்பித்தார். பின்னர் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அல்கா அன்னா பினு மட்டும் ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க;- அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய மாணவி.. விடாமல் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்.!
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வீடு புகுந்து மாணவியை வெட்டிய பசிலை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது வாலிபர் பசில் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனிடையே வெட்டுப்பட்டு படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.