மாமனாரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் கைவிட்ட அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கணவர் வீட்டில் இல்லாத போது, அவரது மாமனார் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், தனது மாமனார் தன்னை மிரட்டியதாகவும், அடித்ததாகவும் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியபோது, அவர் தன்னுடன் வாழ மறுத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ள போலீசார், சம்பத்தின் போது அப்பெண் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால், இதுகுறித்து புகாரில் அப்பெண் குறிப்பிடவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை.. ரவுண்ட் கட்டிய பொதுமக்கள்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் மாமனார் மற்றும் கணவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் நீதிபதி முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அப்பெண்ணின் மாமனார், பணம் பறிக்க இதுபோன்று அப்பெண் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்ற சம்பவம் கடந்த 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் தலைப்புச் செய்தியானது. அப்போது, 28 வயதான ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர், தனது மாமனார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். ஆனால், அப்பெண்ணை அவரது கணவருடன் வாழ உள்ளூர் சமூக பஞ்சாயத்து தடை விதித்தது. மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததால், அவரது கணவர் அப்பெண்ணின் மகன் முறையாவார். எனவே, அவரை மகன் போன்று அப்பெண் பாவிக்க வேண்டும் என கூறி உள்ளூர் சமூக பஞ்சாயத்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.