கொடநாடு விவகாரம்; உண்மையை மறைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் - தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Sep 14, 2023, 12:27 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மையை மறைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் பேசப்பட்டதாக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போனா பேண்ட கலட்ட சொல்றாங்க - பெண் மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

கனகராஜ் மரணம் விபத்தல்ல கொலை

இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, கோவை சிபிசிஐடி போலீஸ் முன்பு ஓட்டுநர் தனபால் ஆஜராகினார். 

சிபிசிஐடி முன் ஆஜர்

இதனை முன்னிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன். கொடநாடு வழக்கு தொடர்பாக சுதாகர் தலைமையில் ஏற்கனவே விசாரணை நடந்தது. தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன். எனது தம்பி ஏற்கனவே எல்லாம் சொல்லியுள்ளார். கொடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது? என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன்.

விஜயலட்சுமியின் உணவில் மாத்திரைகளை கலந்து கொடுத்து கருச்சிதைவு ஏற்பட செய்தவர் சீமான் - வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு

அனைவரும் அதிமுகவினர் தான்

கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மாற்றுக்கட்சியினர் இல்லை. ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர். கொடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியபடி பணம் தரவில்லை. எனது தம்பியை தாக்கியுள்ளனர்‌. எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்த்து தாக்கியுள்ளார். 

2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து எனது தம்பி தப்புகிறார். திரும்ப மீண்டும் அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்து, அயோத்தி பட்டினம் என்ற இடத்தில் உள்ள தென்னத்தோப்பில் மது அருந்தி உள்ளனர். அதிமுக முக்கிய நபர்கள் அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சிபிசிஐடி மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. 

மாட்ட மட்டும் தான் அடக்க தெரியும்னு நினைச்சியா? மல்டி ஸ்டாராக கொடைக்கானலை கலக்கும் அண்ணாமலை

முக்கிய குற்றவாளிகள் . . .

எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. 5 பேக்குகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷ், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைத்துள்ளார். இன்று மாலை விசாரணைக்கு பின்னர் என்ன நடந்தது என விளக்கமாக கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், ஆத்தூர் இளங்கோவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். 

மனநிலை பாதிக்கப்பட்டவனா?

எனக்கு மனநிலை பாதிப்பு இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இளங்கோவன், சவுக்கு சங்கர் போன்றோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். ஏற்கனவே சம்பவம் நடந்த போது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் சுதாகர் தலைமையில் விசாரணை நடந்தது. ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னை கடுமையான முறையில் தாக்கினர். அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன எழுதி வாங்கினார்கள் என தெரியவில்லை. 

2017-க்கு பிறகு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து மதிப்பு உயர்வு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை கவனிக்க வேண்டும். விசாரணை அதிகாரி சொத்து மதிப்பையும் கவனிக்க வேண்டும். தடயங்களை அழித்ததாக ஐஜி சுதாகர் என் மீது வழக்கு பதிவு செய்தார். நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை. எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சோதனை செய்த போது என் போனை வாங்கி கொண்டனர். ஐஜி சுதாகரின் பலவீனத்தை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவன், எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார் சேர்த்து என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர். 

சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன். விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார். தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயார். என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். எதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

click me!