திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கள்ளக்கிணறைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.
பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கள்ளக்கிணறைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இரவு மோகன்ராஜ் வீட்டிற்கு செல்லும் வழியில் அமர்ந்து வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை மோகன்ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்.. ஃபுல் மப்பில் கணவனை துடிதுடிக்க கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி.! நடந்தது என்ன?
அங்கிருந்து கிளம்பிச் சென்ற வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் திரும்பி மோகன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜ், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற சித்தி ரத்தினாம் பாள்(59) செந்தில்குமார்(46) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தை 4 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ்(27), அவருடைய தந்தை ஐயப்பன்(52), செல்லமுத்து(24), தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த விஷால் (எ) சோனை முத்தையா (20), செல்வம்(29) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் சொர்ணம் நடராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அடிப்பாவி.. நீ தாயா இல்ல பேயா? கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூரம்!
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரையும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, ஐயப்பன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் வெங்கடேஷ் என்ற செல்வம் என்பவருக்கு குற்றவாளிக்கு அடைக்கலம் அளித்தது, தடயங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்கு இரண்டு முறை 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.