தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் நான்கு வயது சிறுவன் தர்ஷன் மற்றும் அவரது சகோதரனையும் வெளிப்புறம் உள்ள பாறை மீது மோதச் செய்து கொலை செய்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவனை கொடூரமாக கொன்ற கொலை குற்றவாளி காவல்நிலையத்தில் இருந்து தப்பித்து மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி ஈடுபட்டதை அடுத்து உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் நான்கு வயது சிறுவன் தர்ஷன் மற்றும் அவரது சகோதரனையும் வெளிப்புறம் உள்ள பாறை மீது மோதச் செய்துள்ளார். இதில், 3 வயது குழந்தை தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுவனான சஸ்வந்த் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நீ கெட்ட கேட்டுக்கு என் பொண்ணு உனக்கு கேக்குதா.. நடுரோட்டில் இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை!
இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் என்பவரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து காவல் நிலையத்திறகு பின்புறம் உள்ள மின் இணைப்புப் பாதையில் இருந்து உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி மின் வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ் உடல் கருகி படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: அடிப்பாவி.. நீ தாயா இல்ல பேயா? கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூரம்!
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் இருந்து ஒரு கொலைக் குற்றவாளி எப்படி தப்பித்தார் என உயரதிகாரிகள் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.